வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. அமெரிக்க அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனின் வெற்றியை தொடர்ந்து நேற்று அதிகாரம் மாற்றம் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது, ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திடீரென வெள்ளைமாளிகை வெளியே திரண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். வன்முறை வெடித்தது. அந்த சமயத்தில் பாதுகாப்பு படையினருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் மற்றும் வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…