நான்கு பேர் உயிரிழப்பு., வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி

Default Image

வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. அமெரிக்க அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனின் வெற்றியை தொடர்ந்து நேற்று அதிகாரம் மாற்றம் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது, ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திடீரென வெள்ளைமாளிகை வெளியே திரண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். வன்முறை வெடித்தது. அந்த சமயத்தில் பாதுகாப்பு படையினருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் மற்றும் வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்