SHAREIT,UC NEWS,WE CHAT,NEWS DOG பயன்படுத்த தடை ?
சீனாவின் 41 செல்போன் செயலிகளை எல்லையில் பணிபுரியும் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீன நிறுவனங்கள் வெளியிடும் செல்போன் செயலிகள் மூலம் இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், இதனால், எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சீனாவைச் சேர்ந்த ஷேர் இட், யூசி பிரவுசர், வீ சாட், நியூஸ் டாக் உள்பட 41 செல்போன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என படை வீரர்களுக்கு இந்திய ராணுவம் வலியுறுத்தியுள்ளது. மேலும், ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பிலும், சீன ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய ராணுவம், தேவையற்ற வாட்ஸ்-ஆப் குரூப்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.