#குட் நியூஸ்: இன்ஜினீரிங்கில் புதியதாக சேர்க்கப்பட்ட பிளம்மிங்.! எந்தெந்த பிரிவுக்கு தெரியுமா.?!
இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனங்கள் விரைவில் பிளம்பிங் படிப்பு.
இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தும் AICTE அமைப்பு தற்போது புதியதாக ஒரு பாடத்தை சில முக்கிய இன்ஜினீரிங் பிரிவில் சேர்த்துள்ளது. அதனை பொறியியல் மற்றும் கட்டிடக்கலை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது, பிளம்பிங் தான் அந்த கூடுதல் பாடம். அதனை மாணவர்கள் விருப்ப தேர்வின் படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த விருப்ப தேர்வானது, ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் பிரிவுக்கும், மெக்கானிக்கல் OR என்விரான்மென்ட், சிவில் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவில் படிப்பவர்களுக்கு பிளம்பிங் (PLUMBING – WATER AND SANITATION ) விருப்ப தேர்வாக இருக்குமாம்.
மேலும், பிளம்பிங் என்பது தற்போது மிக முக்கிய தேவையாக மாறி வருகிறது. கட்டுமான துறைகளில் பிளம்பிங் என்பது மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. இதற்காக 50 மணி நேர வகுப்பு, 80 சதவீத எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் 20 சதவீத பிராக்டிகல் மதிப்பெண் கணக்கிடப்படும் என AICTE சேர்மன் அனில் டி.சாகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனங்கள் விரைவில் பிளம்பிங் படிப்புகளை கொண்டுவர உள்ளன. இத்திட்டத்தை அறிமுகப்படுத்த ஏஐசிடிஇ தலைவர் அனில் டி. சஹஸ்ரபுதே மற்றும் ஐபிஏ தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.