பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தை குப்பை தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா எனும் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் இருந்து புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தையின் உடலை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், குழந்தை கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே இறந்து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தை எந்த துணியாலும் மூடப்படாத நிலையில் இருந்ததாகவும், பசியின் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது இந்த புதிதாக பிறந்து குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதால் உயிரிழந்த குழந்தையின் தாயை அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களில் சோதனை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் மோதி நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…