புத்தாண்டு பரிசு..! ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ்கால் மீண்டும் இலவசம்..!

Default Image

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ்  ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு அனைத்து வாய்ஸ்கால்களும் ஜனவரி 1 முதல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கு ஜியோ நிமிடத்திற்கு 6 பைசா  கட்டணம் வசூலித்தது, ஆனால் தனது ஜியோ நெட்வொர்க்கில் உள்ள அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், ஜியோ வாய்ஸ்கால் கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மதித்து, ஜியோ மீண்டும் அனைத்து வாய்ஸ் கால்களையும் ஜனவரி 1 முதல் இலவசம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 செப்டம்பரில் TRAI, ஐயூசி கட்டணத்தை நீக்குவதற்கான காலக்கெடுவை 2020 ஜனவரி 1 ஆம் தேதி வரை நீட்டித்தபோது ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. அப்போது, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஐ.யூ.சியை ரத்து செய்யும் வரை மட்டுமே கட்டணங்கள் அமலில் இருக்கும் என்று பயனர்களுக்கு ஜியோ நிறுவனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்