2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகஅளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும், இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் அன்றைய தினம் பிறந்துள்ளன.
சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தேனேஷியாவில் 13,370, அமெரிக்காவில் 11,280, காங்கோ நாட்டில் 9,400 எத்தியோபியாவில் 9,020, வங்கதேசத்தில் 8,370 குழந்தைகள் பிறந்துள்ளன. உலக நாடுகளில் பிறந்த மொத்த குழந்தைகளில் பாதி, இந்த 9 நாடுகளில் பிறந்துள்ளன. இவற்றில் பல குழந்தைகள் பிறந்த முதல் நாளிலேயே உயிரிழந்துள்ளன.
குழந்தைகளின் பிறப்பு ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குழந்தைகளின் இறப்பு விகிதமும் கவலையளிக்கிறது. 2016-ம் ஆண்டு புள்ளி விவரப்படி, ஒரு நாளில், 2,600 குழந்தைகள் வீதம் இறந்துள்ளன. குறிப்பாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2016-ம் ஆண்டில், பிறந்த ஒரு மாதத்திலேய இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26 லட்சமாகும்.
இதில், 80 சதவீத குழந்தைகள், குறைப் பிரசவம், உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்துள்ளது
source: dinasuvadu.com
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…