புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு!
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவித்தது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேராவில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இரவு 10 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ளுமாறும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன், தமிழகத்தில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூடவும், கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.