இந்தியாவில் ‘கேட் கியூ வைரஸ்’ என்ற புதிய வைரஸ் பரவுகிறது என ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மத்தியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானிகள் தற்போது ‘கேட் கியூ வைரஸ்’ என்ற மற்றொரு புதிய வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர். ஆர்த்ரோபாட் மூலம் பரவும் வைரஸ்கள் பன்றிகள் மற்றும் குலெக்ஸ் கொசுக்களில் காணப்படுவதால் பெரும்பாலும் இது சீனாவிலும் வியட்நாமிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் ஆய்வின் படி, இந்தியாவில் பன்றி மற்றும் மைனா போன்ற பறவையிலிருந்து பரவும் இந்த வைரஸானது நாட்டின் பொது சுகாதார நோய்க்கிருமியாக இருப்பதைக் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், புனேவின் ஐ.சி.எம்.ஆரின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் மாநிலங்களில் சோதனை செய்யப்பட்ட 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் வைரஸிற்கான ஆன்டிபாடிகளை குறிக்கிறது. மாதிரிகளின் சோதனை மேலும் இந்த இரண்டு நபர்களும் ஒரு கட்டத்தில் சி.க்யூ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
அந்த வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த இந்த இரண்டு மாதிரிகள் 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சி.க்யூ.வி. எதிர்ப்பு ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகள் இருப்பதற்கு சாதகமானவை என்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸானது இந்திய கொசுக்களில் 3 விதமான இனங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…