தெலுங்கானாவில் அதிரடி மாற்றம்… இனி “TS” இல்ல “TG” தான்!
Telangana : தெலுங்கானா மாநிலத்தில் புதிய வாகனங்களில் இனி (registration) பதிவு எண்களில் (நம்பர் பிளேட்) “TS” க்கு பதிலாக “TG” பயன்படுத்தும் நடைமுறையை அம்மாநில காங்கிரஸ் அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது, தெலுங்கானாவின் (Telangana) சுருக்கத்தை “TS” பதிலாக “TG” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Read More – ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு… நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு வெற்றி!
மாநிலத்தின் ஆங்கில சுருக்கத்தை மாற்ற மாநில அரசு கடந்த மாதம் முடிவு செய்த நிலையில், தற்போது புதிய வாகனங்களில் “TS” பதிலாக “TG” என மாற்றம் செய்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2014ல் தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு, அப்போதைய டிஆர்எஸ் அரசு ‘டிஎஸ்’ என்பதை மாநில சுருக்கமாக தேர்வு செய்தது.
தற்போது காங்கிரஸ் அரசு, தெலுங்கானாவில் முந்தைய அரசு எந்த விதியையும் பின்பற்றவில்லை, அதனால் மாநிலத்தின் சுருக்கத்தை ‘TS’ ஆக தேர்வு செய்தது. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் சுருக்கத்தை மாற்றுவோம் என்று அறிவித்தார்.
Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.!
அவர் கூறியிருப்பதாவது, டிஆர்எஸ் கட்சிக்கு ஏற்றவாறு ‘டிஎஸ்’ என்ற சுருக்கத்தை தேர்வு செய்தது. இதனால் வாகன பதிவு எண்ணில் உள்ள எழுத்துக்களில் ‘ஸ்டேட்’ இல்லை. இதனால், ஆட்சிக்கு வந்ததும் ‘TS’ என மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி, தற்போது புதிய வாகனங்களில் “TS” க்கு பதிலாக “TG” பயன்படுத்தும் நடைமுறையை அம்மாநில காங்கிரஸ் அரசு கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம் தெலுங்கானா மாநிலம் தற்போது மூன்று சுருக்கங்களைக் கொண்ட வாகனங்களைக் கொண்டிருக்கும். அதன்படி, மாநிலத்தில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்கள் ‘TG’ என்றும் அதே வேளையில், ‘TS’ உடன் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அதேவே தக்கவைத்துக் கொள்ளும் என்றுள்ளனர்.
Read More – சிஏஏ சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது… அரவிந்த் கெஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டு!
இதுபோன்று, 2014ம் ஆண்டு தனி மாநிலமாக மாறுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானா இருந்ததால், ‘AP’ என்ற சுருக்கத்துடன் கூடிய ஏராளமான வாகனங்களும் மாநிலத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.