புதிய நகர்ப்புற இந்தியா – இன்று லக்னோ செல்கிறார் பிரதமர் மோடி …!
புதிய நகர்ப்புற இந்தியா திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக இன்று பிரதமர் மோடி லக்னோ செல்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆசாதி75 புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கப்பட உள்ள நிலையில், இன்று லக்னோ செல்லவுள்ள பிரதமர் மோடி புதிய நகர்ப்புற இந்தியா திட்டத்தின் மாநாடு மற்றும் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.
மேலும் அங்குள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற வீடுகள் திட்டத்தையும் பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் முறையில் திறந்து வைக்க உள்ளார். அதன் பின்பு இந்தத் திட்டத்தின் பயனாளிகள் உடன் பிரதமர் உரையாட உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி லக்னோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூா், ஜான்சி, காஜியாபாத் ஆகிய பகுதிகளுக்கு 75 பேருந்து இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் உத்திரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.