புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் – பிரதமரிடம் கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்..!

Default Image

புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.  

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில், தற்போது ஆப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இங்கிலாந்து இத்தாலி போன்ற நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளான கனடா, பிரிட்டன் நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க மண்டலத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பெரும் சிரமங்களுக்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது, எனவே புதிய வகை கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்