இந்தியாவில் 18 மாநிலங்களில் உருமாறிய புதிய வகை கொரோனா…! – மத்திய அரசு
இந்தியாவில் மட்டும் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், சமீப நாட்களாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸானது, இந்தியாவில் மட்டும் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 10,787 பேர் மாதிரிகளை சோதனை மேற்கொண்டதில், 736 பேருக்கு மரபணு மாறிய புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.