புதிய வகை கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்..!
கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல்.
சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின், பிரதமர் மோடி, கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை அதிகரிக்க மாநிலங்களுக்குஅறிவுறுத்தியுள்ளார்.
முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றையும், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் விலையை மாநிலங்கள் தொடர்ந்து கண்காணிக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.