புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார் என காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் ரங்கசாமி அதிருப்தியில் உள்ளார்.
என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டும் என தொடர்ந்து ரங்கசாமியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை ரங்கசாமி தனது முடிவு என்ன என்பதை வெளியில் சொல்லவில்லை, பிரதான எதிர்க்கட்சி என்பதால் ரங்கசாமி என்ன செய்ய போகிறார் என்பது புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், திமுக மதசார்பற்ற அணி கூட்டணிக்கு என்.ஆர் காங்கிரஸ் தலைமை ஏற்று வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் கூறுகையில், பொது எதிரியான பாஜகவை வீழ்த்த என்.ஆர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார். பாஜகவை வீழ்த்த எதையும் விட்டுக்கொடுக்க தயார் என கூறினார். மேலும், மதசார்பற்ற அணிகள் ஓன்று சேர்ந்தால் மிகப்பெரிய வெற்றியை பெறமுடியும். புதுச்சேரியில் பாஜகவை வீழ்த்துவதற்காக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…