கேரளாவில் புதிய வகை ‘நாய் சுறா’ மீன் கண்டுபிடிப்பு.! அது பற்றிய கூடுதல் தகவல்.!

Dogfish Shark Off Kerala

கேரளா : இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) விஞ்ஞானிகள் கேரள கடற்கரையில் புதிய வகை நாய்மீன் சுறாவைக் கண்டுபிடித்துள்ளனர். கேரளாவின் சக்திகுலங்கரா மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானி வினேஷ் தலைமையில் இந்திய விலங்கியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக ZSI-ன் இயக்குநர் திருத்தி பானர்ஜி தெரிவித்தார். பல்வேறு வகையான நாய்மீன்கள் உள்ளது, அதில் இது ஒரு சிறிய நாய்மீன் சுறா ஆகும். அதன் இறக்கைகள், ஈரல் எண்ணெய் மற்றும் இறைச்சி தேவைப்படுவதால், மீனவர்களால் அவ்வப்போது பிடிக்கப்படுகிறது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனங்கள் பற்களின் எண்ணிக்கை, உடல் மற்றும் தலை உயரம், இறக்கை அமைப்பு மற்றும் நிறத்தில் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன என்று ZSI இதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குழுத் தலைவரான ZSI விஞ்ஞானி பினேஷ் கேகே கருத்துப்படி, “அரபிக்கடலுக்கு அருகிலுள்ள கேரளாவில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாங்கள் சேகரித்த மாதிரிகளில் இருந்து இது நாய்சுறா மீனின் புதிய இனமான ‘ஸ்குவாலஸ் ஹிமா’ (Squalus hima)-வைச் சேர்ந்தது” என கண்டுபிடிக்கப்பட்டது.

ஆழ்கடல் சுறாக்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக கடலுக்கு 1,000 மீட்டர் வரை நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட 13 மாதிரிகளின் அடிப்படையில் புதிய இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

ஸ்குவாலஸ் ஹிமா பற்றி :

  • ஸ்குவாலஸ் ஹிமா, அரேபிய ஸ்பர்டாக் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஸ்குவாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை நாய்மீன் சுறா ஆகும்.
  • அரேபிய ஸ்பர்டாக் அரபிக் கடல் மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடலின் ஆழமான நீரில் காணப்படுகிறது. அவை பொதுவாக 200 முதல் 600 மீட்டர் வரை ஆழத்தில் உயிர் வாழுகின்றது.
  • இந்த சுறா இனம் ஒப்பீட்டளவில் சிறியது, பொதுவாக 60-70 செமீ நீளத்தை எட்டும். மற்ற ஸ்பர்டாக்களைப் போலவே, அவை இரண்டு முதுகுத் துடுப்புகளுடன் கூடிய தடிமனான உடலைக் கொண்டுள்ளன, ஒவ்வொன்றும் முதுகெலும்புடன் பொருத்தப்பட்டுள்ளன.
  • அரேபிய ஸ்பர்டாக் கடல் தரையில் காணப்படும் பல்வேறு சிறிய மீன்கள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்கிறது.
  • மேலும் அவை, ஓவோவிவிபாரஸ், ​​அதாவது பெண்ணின் உடலில் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் உயிருடன் பிறக்கின்றன.
  • இந்த இனம் பற்றிய விரிவான ஆய்வுகள் இல்லாததால், ஸ்குவாலஸ் ஹிமாவின் பாதுகாப்பு நிலை குறித்து இன்னும் போதுமான தகவல் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்