பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை இரவு நேரத்தில் ஒரு தனிப்பட்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் ஐதராபாத் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் பெண்கள் பாதுகாப்பிற்கான ஒரு புதிய திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்படும் என்றும், இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்ப வாகனம் எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த சேவையை பெண்கள் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவி எண்கள் 100, 112, 181 ஆகியவற்றில் தொடர்புகொண்டு போலீசாரிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கேட்கலாம் என்றும், பெண் போலீஸ் ஒருவருடன் வாகனத்தில் பெண்கள் அவரவர் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்படுவார்கள் என கூறினார் பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங். இந்த புதிய திட்டம் மக்களால் வரவேற்கப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…