சுற்றுலாத்துறைக்காக புதிய திட்டம் – நிர்மலா சீதாராமன்
தேக்னா அப்னா தேஸ் ( உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டுவரப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சுற்றுலாத்துறைக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தேக்னா அப்னா தேஸ் (உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.