anuragtagur [Imagesource : Wiki]
நாட்டில் 15-29 வயது உட்பட்டோருக்கான “மேரா யுவா பாரத்” (My Bharat) எனும் புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர், இளைஞர் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், தன்னாட்சி நிறுவனமான மேரா யுவ பாரதத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நாட்டில் உள்ள 40 கோடி இளையோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இது இளைஞர்களின் கனவுகளை நனவாக்க சமமான அணுகலை வழங்க முயற்சிக்கிறது. இளைஞர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படும் வகையில் புதிய தளம் அமையும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, மருத்துவர்களின் ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவர்கள் 65 வயதிற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்றுள்ளனர். மேலும், மருத்துவர்களுக்கான ஓய்வு வயது 65 ஆக உயர்த்தியது மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…