பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டம்.. 7.5% வட்டி! – நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு உதவற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இதில், 2 ஆண்டுகளுக்கு 7.5% வட்டி அளிக்கும் பெண்களுக்கான புதிய ஒருமுறை சிறுசேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டம் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்று அழைக்கப்படும், இது மார்ச் 2025 வரை கிடைக்கும். பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சத்தை 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.5% வட்டி விகிதத்தில் தொகை கிடைக்கும். பெண் அல்லது பெண் குழந்தை பெயரில் டெபாசிட் செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் பகுதியளவு திரும்பப் பெறும் வசதியும் இருக்கிறது. இந்தத் திட்டத்தில், அதிகபட்ச வைப்புத் தொகை ரூ.2 லட்சமாக வைக்கப்படுகிறது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளது.