புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு புதுக்கட்டுப்பாடு..
- தேர்தலை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில்,மதுபானக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை கையாளும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளை இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை இரவு 10 மணிக்குள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிமம் பெறப்பட்ட கடைகளை தவிர, வேற எந்த இடங்களிலும் மது விற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அனுமதி இன்றி ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மதுபானங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அப்படி எடுத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்த விதிகளை மீறுபவர்கள் மீது, கலால்துறை சட்டவிதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.