இன்று முதல் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!
இன்று முதல் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம்மிலிருந்து ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எஸ்.பி.ஐ-யில் வங்கி கணக்கு வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் இலவசமாக 4 முறை பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எஸ்.பி.ஐ வங்கிகளில் மட்டுமல்லாமல் மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தாலும் இதே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், கட்டணத்துடன் பொருட்கள் மற்றும் சேவை வரியும் சேர்த்து பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பக்கம் கொண்ட காசோலை புத்தகத்திற்கு 40 ரூபாய் மற்றும் 25 பக்கம் அடங்கிய காசோலை புத்தகத்திற்கு 75 ரூபாய் என ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த காசோலை பயன்பாட்டுக்கு வரம்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.