யு.பி.எஸ்.சி. நடத்த இருந்த 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு அக்டோபர் 4ல் முதல்நிலை தேர்வு.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் பதவிக்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்தாண்டு சிவில் சர்வீஸ் பணியில் 796 பேரும், ஐஎப்எஸ் பணியில் 90 பேரும் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது. இந்த தேர்வுக்கு சுமார் 12 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், யு.பி.எஸ்.சி. 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ், ஐஎப்எஸ் முதல் நிலை தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதியும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியும் நடக்கிறது. ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு வருகிற பிப்ரவரி 28ம் தேதியும், இன்ஜினியர் சர்வீஸ் தேர்வு வருகிற ஜனவரி 5ம் தேதியும் நடைபெறுகிறது. மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியும் நடக்கிறது.
ஜிேயா சயின்டிஸ்ட் முதல் நிலை தேர்வு ஜனவரி 19ம் தேதியும், மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியும் நடைபெறுகிறது. சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் அதில் தேர்ச்சி பெற்றால் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…