ட்ரோன்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்ட சிவில் விமான போக்குவரத்து.!

Default Image

அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர், உற்பத்தியாளர் வர்த்தகர், உரிமையாளரைத் தவிர வேறு எந்த நபருக்கும்  ட்ரோன்களை விற்கக்கூடாது.

2020 ஆம் ஆண்டிற்கான ஆளில்லா விமான அமைப்பு (யுஏஎஸ்) துறைக்கான புதிய விதிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (Directorate General of Civil Aviation) வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ட்ரோன்களை கொண்டு கண்காணிப்பு மற்றும் கிருமிநாசினி போன்ற நோக்கங்களுக்காக இதன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ட்ரோன் இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வர்த்தகர், உரிமையாளர் மற்றும் ஆபரேட்டர் ஆகியோர் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் (Directorate General of Civil Aviation) ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வர்த்தகர், உரிமையாளர் அல்லது ஆபரேட்டர் என அங்கீகரிக்கப்படுவதற்கு அவர் இந்தியாவின் குடிமகனாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர், உற்பத்தியாளர் வர்த்தகர், உரிமையாளரைத் தவிர வேறு எந்த நபருக்கும்  ட்ரோன்களை விற்கக்கூடாது. சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அனுமதித்ததைத் தவிர வேறு எந்த ட்ரோன்களும் எந்த பொருள்களையும் சுமக்கக்கூடாது. 250 கிராமுக்கும் குறைவான நானோ வகுப்பு ட்ரோன்கள் மட்டுமே பொதுவாக இந்தியாவில் இயக்க அனுமதிக்கப்படும். கனமான ட்ரோன்களை இயக்க “தகுதிவாய்ந்த ரிமோட் பைலட்” இயக்க அனுமதிக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு அங்கீகரிக்கப்பட்ட யுஏஎஸ் இறக்குமதியாளர் மட்டுமே இந்தியாவில் ட்ரோன் பாகத்தை இறக்குமதி செய்வார்கள் என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war