வருகிறது பின்னணி பஜனை இசை உள்ளிட்ட பல வசதிகளுடன் புதிய ராமாயண எக்ஸ்பிரஸ்.!

Default Image
  • இந்துக்களின் முக்கிய கடவுளான ராமன் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அடுத்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய கடவுளான ராமன் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அடுத்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இதனிடையே அயோத்தி தொடங்கி ராமேஸ்வரம் வரை 16 இரவு 17 நாள் பயணம் ஸ்ரீராம் எக்ஸ்பிரஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 700 பேர் வரை இந்த பயணத்தில் பங்கு இருக்கலாம் இதில் 40 பேர் மட்டும் இலங்கை வரை சென்று ராமர் தொடர்புடைய இடங்களை பார்க்கும் வகையில் பயணத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ரயில் சேவையை கூடுதல் வசதிகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதாவது ரயிலுக்குள் ராமாயணம் தொடர்புடைய படங்கள், பாடல்கள் உள்ளிட்ட கருப்பொருட்கள் அடங்கிய உட்புறம், பின்னணி பஜனை இசை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய ரெயில் உருவாக்கப்பட்டுள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், மேலும் இந்த ரயிலில், ராமர் தொடர்புடைய மேலும் சில இடங்கள் இந்த பயண திட்டத்தில் சேர்க்கப்பட்டு புதிய பயண அட்டவணை விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், ஹோலிப்பண்டிகை பிறகு இந்த ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்