உணவுகளின் விலையை சரிபார்க்க வந்துவிட்டது புது அப்..!
ரயில்வே உணவகங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியலைக் கொண்ட செயலியை டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் வெளியிட்டுள்ளார்.
Menu On Rails என்ற பெயரில் வெளியிப்பட்டுள்ள இந்த செயலியில் ராஜதானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் வகைகளும் அவற்றின் விலையும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக பயணிகள் இந்த செயலியில் விலைப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், ரயிலின் வகை, நிலையத்தின் இடம் உள்ளிட்டவற்றிற்கேற்ப மாறும் விலையையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.