கர்நாடக மாநிலத்திற்கு புதிய பாஜக தலைவர் நியமனம்
கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா.
தற்போது எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நளின் குமார் காடீல் எம்.பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.