நீட் தேர்வுக்கான புதிய கொள்கைகள் – கொரோனா தொற்றால் புதிய அறிவிப்பு!
கொரோனா காலகட்டத்தில் நீட் தேர்வுகள் நடப்பதால், புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.
தேசிய நுழைவு தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கொரானா வைரஸ் தொற்று காரணத்தால் புதிய தேர்வு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படிஒரு தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் தேர்வு மையத்தில் கொரோனா அறிகுறி கொண்ட ஒருவர் இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையத்தில் முன்னதாக சொல்லிவிட வேண்டும். அவர்களுக்கு தேர்வுக்கு நேரில் வருவதற்கான வாய்ப்பை தவிர்த்து அவருக்கு வேறு ஏதேனும் வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறி உள்ளது. மேலும்கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வெளியிடப் பட்டுள்ள வழிகாட்டுதலின்படி கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள தேர்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடல் ரீதியாக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், மாறாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிற வழிகள் மூலமாகவும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் அல்லது அந்தப் பல்கலைக் கழகங்களும் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து அவர்களுக்கு பின்னர் தேர்வு நடத்துவதற்கான முடிவுகளை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
சோடியம் ஹைப்போகுளோரைட், சோப்பு , முகமூடிகள் ஆகியவை பல்கலைக்கழகங்கள் மற்றும் பரீட்சை நடத்தக்கூடிய அதிகாரிகளால் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும். சரியான நேரத்திற்கு உள்ளே வராதவர்கள் நிச்சயம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா அறிகுறி இல்லாத ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், தேர்வு அறையில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள தேர்வு மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வழங்குவதற்கு முன்பாக கைகளை சனிடைசர் கொண்டு சுத்திகரித்து பின்னரே வழங்கவோ அல்லது திருப்பி பெறவும் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.