இன்று பிரதமருக்கு புதிய விமானம் வருகிறது..!
பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்காக வாங்கிய இரண்டு வி.வி.ஐ.பி ஏர் இந்தியா ஒன் விமானத்தில் ஒன்று இன்று இந்தியாவிற்கு வருகிறது. இந்த விமானம் பிற்பகல் 4 மணியளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விமானம் முன்பு இருந்த போயிங் விமானத்தை விட மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டது.
இந்த சிறப்பு விமானத்தின் சிறப்பு அம்சங்கள்:
இரண்டு ஏர் இந்தியா ஒன் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.
இந்த விமானம் இரட்டை GE90-115 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. விமானம் மணிக்கு 900 கி.மீ வேகத்தில் பறக்க முடியும்.
இந்த விமானம் ஏவுகணை தாக்குதல் அல்லது விமான விபத்தில் இருந்து பாதுகாக்கும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் போது, எங்கும் எரிபொருள் நிரப்ப தரையிறங்க வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து 17 மணி நேரத்திற்கும் மேலாக பயணிக்க முடியும்.
இந்த விமானங்களை இயக்க ஏர் இந்தியா 40 மூத்த விமானிகளையும் தேர்வு செய்துள்ளது. இந்த 40 விமானிகள் மட்டுமே இந்த இரண்டு விமானங்களை இயங்குவார்கள்.
இந்த விமானத்தில் ஒரு ஆய்வகம், சாப்பாட்டு அறை, பெரிய அலுவலகம் மற்றும் மாநாட்டு அறை உள்ளது.மேலும், மருத்துவ அவசரநிலைக்கு விமானத்தில் மருத்துவ தொகுப்பும் உள்ளது.