இந்திய வரலாற்றிலேயே இல்லாத புதிய திட்டம்..!மத்திய அரசு அறிவிப்பு..!
சென்னை செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:-
மத்திய அரசு கடந்த ஜூன் 6-ம் தேதி 40 செயற்கைக்கோள்கள் மற்றும் அதனை சுமந்து செல்ல ராக்கெட்டுகளை உருவாக்குவதற்காக 10,400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது
இஸ்ரோ வரலாற்றிலேயே மத்திய அரசால் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது, இதுவே முதல் முறையாகும் என்றார். மேலும் இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகள் உள்நாட்டிலேயே நடைபெற இருப்பதால் சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
மேலும், இந்த 40 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மற்றும் பல செயற்கைக்கோள்கள் உருவாக்க உள்ளதால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் கடுமையான வேலை இருக்கும் என்றும் தெரிவித்தார்