புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் கனவு – அமித்ஷா
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திரமோடியே திறந்துவைப்பார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வரும் மே 28ஆம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ளது. 2020ஆம் ஆண்டு இந்த பணிகள் துவங்கப்பட்டு, 64,500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் கனவு; புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 60 ஆயிரம் பேரை பிரதமர் கௌரவிப்பார்; தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்கள் வழங்கிய செங்கோல்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும்; புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திரமோடியே திறந்துவைப்பார் என தெரிவித்துள்ளார்.