கேரளாவை சேர்ந்த தம்பதி ஒருவர் தங்களது 4 வயது சிறுமிக்கு பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய கேரள உயர்நீதிமன்ற அனுமதியை நாடியுள்ளனர். இப்படி ஒரு வித்தியாசமான , சிக்கலான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி விஜி அருண் அமர்வு முன் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, குழந்தைகளுக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் இந்த அறுவை சிகிச்சை குழந்தைகளின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறும் செயல் என நீதிபதி குறிப்பிட்டார்.
இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் ஒரு தனி சட்டத்தை கொண்டு வர வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமேயானால் அறுவை சிகிச்சையை நீதிமன்றம் அனுமதிக்கும். இம்மாதிரியான அறுவை சிகிச்சை செய்து குழந்தைகள் வளரும்போது அது அவர்களின் உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணையில், இம்மாதிரியான கோரிக்கைகளை பரிசீலிக்க மாநில அளவிலான ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் ஒரு உளவியல் நிபுணர் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் இடம்பெற வேண்டும் இந்த அறுவை சிகிச்சை விவகாரம் குறித்து, 2 மாதங்களுக்குள் அந்த குழு முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…