மத்திய தேர்வாணையம் அறிவித்துள்ள 24,369 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு, உடனே விண்ணப்பிக்கவும்.!
மத்திய பணியாளர் தேர்வாணையம் 24,369 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SSC எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக கான்ஸ்டபிள், CAPF(Central Armed Police Force), SSF(Secretariat Security Force), Sepoy in NCB(Narcotics Control Bureau) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை www.ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் படித்து விட்டு விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 27.10.2022 முதல் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2022 என அறிவித்துள்ளது.
NCC சான்றிதழ் வைத்திருந்தால் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு,
விண்ணப்பம் தொடங்கிய நாள் – 27.10.2022
விண்ணப்பத்தின் இறுதி நாள் – 30.11.2022
வயது வரம்பு – 18 to 23
கல்வித்தகுதி – 10th தேர்ச்சி
பணியின் பெயர் – பணியிடங்கள்
BSF – 10,497
CISF – 100
CRPF – 8,911
SSB – 1,284
ITBP – 1,613
AR – 1,697
SSF – 103
NCB – 164
விண்ணப்பதாரர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னதாக அதிகாரபூர்வ இணையதளமான www.ssc.nic.in க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.