நேபாள நாட்டு வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகள்.! கண்டனம் தெரிவித்த வெளியுறவுத்துறை.!

Default Image

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடாக நேபாளமானது, இந்தியவுடன் 1800 கி.மீ எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கணக்குபடி லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று அண்மை காலமாக கருத்து கூறிவருகிறது. மேலும், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளையும் தங்களது பகுதி என நேபாளம் உரிமை கோரிவருகிறது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதற்கு நேபாள நாட்டு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

நேபாளத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவின் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், நேபாளத்தின் புதிய வரைபடத்தினை பற்றி அதிகாரப்பூர்வமாக விரைவில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும். நேபாளத்தில் நடவடிக்கை வரலாற்று ரீதியான அடிப்படையில் இல்லை. எல்லை பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு நேபாளத்தில் நடவடிக்கை ஊறுவிளைவிக்கும். நேபாளம் வெளியிட்ட இந்த வரைபடம் செயற்கையானது.’ என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tirupati
pongalgift
news of live
goa
california fire accident
martin guptill