#Breaking:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பி.யாக பதவியேற்பு!
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில்,மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்பிக்களில் 24 பேர் தற்போது டெல்லியில் பதவியேற்றுள்ளனர்.அவர்களில் குறிப்பாக,கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல்,காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் உள்ளிட்டோர் புதிய எம்பிக்களாக பதவியேற்றுள்ளனர்.புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடியை இன்று மாலை புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர்.
முன்னதாக,ஜூன் 10-ஆம் தேதி கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில்,மாநிலங்களவை எம்பி பதவிக்கு கர்நாடகாவில் இருந்து போட்டியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும்,நடிகரான ஜக்கேஷ் மற்றும் லெகர் சிங் ஆகியோர் என பாஜக சார்பில் மொத்தம் 3 பேர் வெற்றி பெற்றனர்.மேலும்,காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றிருந்தார்.
அதே சமயம்,மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட, கிரிராஜன்,ராஜேஷ்குமார்,கல்யாணசுந்தரம்,ப.சிதம்பரம்,சிவி சண்முகம்,தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.