புதிய அமைச்சகம் அறிவிப்பு.!! பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் யார், யார்?

மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த புதிய அமைச்சகம் கூட்டுறவு நிறுவனங்களுக்கான வணிகத்தை எளிதாக்கவும், நாடு முழுக்க கூட்டுறவு துறையை கவனிப்பதற்காகவும் மற்றும் மாநில கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு கட்டமாக கூட்டுறவு ஒன்றிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் அமைச்சராக முதல் முதலாக பொறுப்பேற்க போகும் எம்பி யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இளம் எம்பி ஒருவருக்கு இந்த புதிய அமைச்சரவை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. புதிய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. இதில் பல மத்திய அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.