#BREAKING: குஜராத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்..!

Default Image

குஜராத்தின் புதிய அமைச்சரவையில் 24 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குஜராத்தில் விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார்.  திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர், எந்த எதிர்ப்பின்றி பூபேந்திர படேல் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு  கடந்த 13-ஆம் தேதி காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்று கொண்டார்.

இந்நிலையில், குஜராத் ஆளுநர்  புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் முன்னிலையில் நடந்து வருகிறது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலையில் புதிய அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்று முதல்வர் பூபேந்திர பட்டேலின் கீழ் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்