புதிய மெட்ரோ ரயில் பாதை; கர்நாடாகாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.!

Default Image

பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கிறார்.

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகாவிற்கு தனது ஏழாவது முறை பயணத்தை மேற்கொள்கிறார். சிக்கபள்ளாப்பூர், பெங்களூரு மற்றும் தாவாங்கேரே ஆகிய இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) விமான நிலையத்தில் தரையிறங்கும் பிரதமர், ஹெலிகாப்டரில் சிக்கபள்ளாப்பூர் சென்று அங்குள்ள ‘ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை’ (எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர்) திறந்து வைக்கிறார்.

கிராமப்புறத்தில் தரமான மருத்துவ சேவை மற்றும் மருத்துவக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர் ஆராய்ச்சி நிறுவனம், 2023 கல்வியாண்டில் இருந்து செயல்படத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தனது இந்த பயணத்தின் போது, நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்தும் முயற்சியாக பெங்களூரு மெட்ரோவின் 2 ஆம் கட்டத்தின் புதிய பகுதியை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ நீட்டிப்பு திட்டத்தின், வைட்ஃபீல்ட் (காடுகோடி) மெட்ரோ முதல் கிருஷ்ணராஜபுரா மெட்ரோ லைன் வரையிலான 13.71 கிமீ தூரத்தையும், பிரதமர் மோடி வைட்ஃபீல்ட் மெட்ரோ நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் இந்த மெட்ரோ பாதை நீட்டிப்பு திட்டம் சுமார் 4,250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் பின்னர், பிரதமர், மாவட்டத் தலைமையகமான தாவங்கரேவுக்குச் சென்று, விஜய் சங்கப்லா யாத்திரையின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

கர்நாடகாவில் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியதில் இருந்து, பிரதமர் பங்கேற்கும் முதல் கட்சிக் கூட்டம் இது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்