இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க ‘புதிய மன்மோகன்சிங்’ தேவை – சஞ்சய் ரவுத்
இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க ‘புதிய மன்மோகன்சிங்’ தேவை என சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சியில் காணப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் நரேந்திரமோடி பொருளாதார நெருக்கடியை கையாளும் முறை குறித்து, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெறுவது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு தேவையான உயிர் காக்கும் மருந்து அல்ல. மறைந்த அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்டை உதாரணத்துக்கு கூறி, அமெரிக்காவை பொருளாதார மீட்சிக்கு கொண்டு சென்றவர் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்.
மோடி இப்போது கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியேறி, ரூஸ்வெல்ட்டின் கதாபாத்திரத்தை பின்பற்ற வேண்டும் என்றும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து விமர்சித்த அவர், பொருளாதாரத்தை புதுப்பிக்க இந்தியாவுக்கு புதிய மன்மோகன்சிங் தேவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தொற்று நோய் உலகம் முழுவதும் பயங்கரமான மந்தநிலையை கொண்டு வந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.