கேரளாவை சேர்ந்த , பிடெக் முதலாமாண்டு மாணவர் மைக் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட முகமூடி ஒன்றை வடிவமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மனிதனை இந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கூடிய முக்கியமான ஒரு கவசமாக தான் முக கவசம் திகழ்கிறது. முக கவசங்கள் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில், திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு பிடெக் மாணவர் புதிய வகை மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
கேவின் என்ற மாணவர் ஒரு மருத்துவரின் மகன் ஆவார். தனது பெற்றோர் நோயாளிகளுடன் தொடர்பு கொள்வதில் சிரமப்படுவதை கவனித்த அவர், மைக் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட முகமூடி ஒன்றை வடிவமைத்துள்ளார்.தான் வடிவமைத்த முகமூடியை முதலில் தனது பெற்றோர்களான டாக்டர் செனோஜ் கே.சி மற்றும் டாக்டர் ஜோதி மேரி ஜோஸ் ஆகியோரிடம் சோதித்தார். அதனை தொடர்ந்து அதன் தேவை அதிகரித்ததை அடுத்து மேலும் அதிகமான முகமூடிகளை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.
இந்த முகமூடியை 30 நிமிடம் சார்ட் செய்தபின் 4 முதல் 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இது ஒரு காந்தத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முகமூடி ஆகும். இந்த முகமூடியை பயன்படுத்தும் போது நோயாளிகளிடம் மருத்துவர்கள் பேசுவதற்கான சிரமம் தவிர்க்கபடுவதாகவும், இது குறித்து மற்றவர்களிடம் நல்ல கருத்துக்கள் தான் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் கூறுகையில், இது போன்ற 50-க்கும் மேற்பட்ட முகமூடிகளை தென்னிந்தியாவில் மருத்துவர்கள் பயன்படுத்துவதாகவும், இந்த சாதனங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான மூலதனமும், உபகரணங்களும் என்னிடம் இல்லை. ஆனால் ஒரு பெரிய நிறுவனம் இந்த சிறிய உதவியை செய்ய எனக்கு தயாராக இருந்தால், இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…