30 ஆண்டில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது – பிரதமர் மோடி உரை.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக 21ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது, 30 ஆண்டில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது. புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யும். புதிய கல்விக் கொள்கைக்காக 5 ஆண்டுகள் உழைத்தும் பணி இன்னும் முடியவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து என்ன உள்ளதோ அப்படியே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மழலை கல்வியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக 21ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மாணவர்களால் சக மாணவர்கள் பெயரை எவ்வளவு வேகமாக சொல்ல முடியும் ? தலைவர்களின் படங்கள் பார்த்து மாணவர்கள் வேகமாக பெயரை சொல்லும் அளவிற்கு பழக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும். இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும் என்று மத்திய கல்வி அமைச்சக மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த மாநாட்டில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே, முதல் நாளில் மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…