இதய கோளாறுக்கு புதிய மருந்து.! விலை ரூ.4,800 மட்டுமே.!
இதய செயலிழப்பு கோளாறு சிகிச்சைக்காக Dapagliflozin (ஃபார்ஸிகா) எனும் மருந்துக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் விலை 4,800 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
இதய செயலிழப்பு கோளாறு சிகிச்சைக்காக தற்போது புதிய மருந்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, Dapagliflozin (ஃபார்ஸிகா) எனும் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை AstraZeneca Pharma India Limited என்கிற நிறுவனம் அரசின் அனுமதிக்காக சோதனைக்கு உட்படுத்தியது. DAPA-HF ஆய்வு முடிவுக்கு பின்னர், மேற்கண்ட மருந்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஆசியாவில் உள்ள இதய நோயாளிகள் உட்பட இந்தியாவை சேர்ந்த இதய நோயாளிகளும் உட்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கான டி.சி.ஜி.ஐயின் விரைவான ஒப்புதல் செயல்முறையில் இதுவும் ஒன்றாகும்.
இதன் மூலம், இதய கோளாறு மோசமடைதலானது 26 சதவீதம் குறைந்துள்ளது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால், இதய கோளாறு இறப்புகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மருந்தின் விலை இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு 4,800 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இது வளர்ந்த நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட 80 சதவீதம் குறைவு என கூறப்படுகிறது. இதன் விற்பனை இம்மாதம் (ஜூலை) முதல் இந்தியாவில் தொடங்க உள்ளதாம்.