புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்! முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து!
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ம் தேதி பதவியேற்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழத்தில் இந்திய பொருளாதார கொள்கை குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் படேல் இந்திய பொருளாதார கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வங்கிகள் அதிக அளவில் கடன்களை வழங்க ஆரம்பித்தால், அது சிக்கலில் முடியும் என்றும், கடன்களை அதிக அளவில் கொடுத்தால், வங்கிகளில் வராக்கடன்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வராக்கடன்களை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு நிதியளிக்க வேண்டும் என்றும், இதன்மூலம் அரசின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்றும் உர்ஜித் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.