புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது.
2020 புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதனிடையே, தற்போது அமலில் இருக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, புதிய தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும், கடந்த ஜூலை 29ம் தேதி, இந்த கல்விக் கொள்கை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று நடக்கும் மாநாட்டு முழு நேரம் நடைபெறும் என்றும் இதில் பிரதமர் மோடி சிறப்புரை வழங்குவார் எனவும் கூறியுள்ளனர்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…