கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து.
உலகம் முழுவதும் கொரோனா என்கின்ற கொடிய வைரஸ் நோயானது, அனைவரையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால் இதுவரை, 8,776,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 462,905 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, ஃபேபிஃப்ளூ என்ற பெயரில் ஆன்டிவைரல் மருந்து ஃபாவிபிராவிரை அறிமுகப்படுத்தியதாக க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், க்ளென்மார்க் மருந்துகள் தலைவரும் நிர்வாக இயக்குநருமான க்ளென் சல்தான்ஹா இதுகுறித்து கூறுகையில், இந்தியாவில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, எங்களது மருந்து நிறுவனத்திற்கு பெரும் மன அழுத்ததை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்றும், இந்தியாவில் இந்த மருந்து சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.