வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை மையம்..!
வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி – இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வருகிற ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என்பதால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு வட மேற்கு, வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகும். தெற்கு ஒடிசா ஆந்திரா பகுதிகளில் உருவாகும் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு ,வெஸ்ட் சென்ட்ரல் அரேபியான்சீயாவில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். லட்சத்தீவு பகுதி மற்றும் கேரளா கர்நாடகா கடற்கரைகள் 60. கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.