வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! கனமழை தொடரும்!
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும், அந்தமான், நிக்கோபார் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.