நாளை முதல் இந்த மாநில விமானங்களுக்கு தடை- கொல்கத்தா விமான நிலையம்!
கொல்கத்தா விமான நிலையம் டெல்லி, மும்பை, சென்னை, புனே, அகமதாபாத் மற்றும் நாக்பூரிலிருந்து நாளை முதல் ஜூலை 19 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் எட்டாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் டெல்லி, மும்பை, சென்னை, புனே, அகமதாபாத் மற்றும் நாக்பூரிலிருந்து நாளை முதல் ஜூலை 19 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து நாளை முதல் முதல் 19 வரை கொல்கத்தாவுக்கு எல்லா விமானங்களும் தடை என்று அறிக்கை வெளிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்ஹா ஜூன் 30 ம் தேதி விமானங்களை நிறுத்தி வைப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.