டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!

Default Image

டெல்லி கலவர வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவர் குர்ஷித் பெயர் இடம்பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டியவர்கள், ஆத்திரமூட்டும் வகையில் பேசியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், உமர் காலித், நதீம் கான் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தின்படி இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பதில் அளித்த குர்ஷித், குப்பைகளை சேகரிக்கும்போது, நிறைய அசுத்தங்கள் கிடைக்கும் என்றும் எந்தவொரு குப்பையையும் தனிநபர்களின் வாக்குமூலத்திற்கு ஆதரவாக வைக்கலாம் எனவும் கூறியுள்ளார். நான் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக சாட்சி பொய் சொல்லவில்லை என்றால், அவரது வாக்குமூலம் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதா? அவர்கள் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த வாக்குமூலத்திற்கு என்ன மதிப்பு? என்றும் குர்ஷித் கேள்வி எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi