டெல்லி:கொரோனா தொற்றில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.லேசான அறிகுறிகள் உள்ளதால் அவர் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டிருந்தார்.இதுகுறித்து,கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘எனக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியானது.லேசான அறிகுறிகள் உள்ளது எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.கடந்த சில நாட்களாக என்னைத் தொடர்பு கொண்டவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு,சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’, என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைந்து விட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இது குறித்து,தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறுகையில்:
“கொரோனா தொற்றிலிருந்து இருந்து மீண்டு உங்களுக்கு சேவை புரிய வந்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…